முல்லைத்தீவில் குளிக்கச்சென்ற இளைஞன் சடலமாக மீட்ப்பு

முல்லைத்தீவு விஸ்வமடுக் குளத்தில்  குளிக்கச்சென்ற இளைஞன் இன்று  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியைச் சேர்ந்த இருபத்து எட்டு வயதான தவராசா சந்திரகுமார் என புதுக்குடியிருப்பு பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன
குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது
இன்று பகல் வேளை தனது நண்பர்ககள் ஐந்து பேருடன் விஸ்வமடுக்குளத்தில் நீராடிக்கொண்டிருந்தவரை  இரண்டுமணியளவில் காணவில்லை எனத் தேடியபொழுது நான்கு மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்  என அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்
 சடலமாக மீட்கப்பட்ட  இளைஞனை சம்பவ இடத்திற்கு வருகைதந்த  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றின் பதில் நீதிபதி பரஞ்சோதி பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்ததனை அடுத்து குறித்த சடலம் கிளிநொச்சி பொது வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்புப் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
Facebook Comments