மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு உத்தரவு
கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்தினை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார்.
கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள உருத்திரபுரம் வடக்குகிராம அலுவலர் பிரிவில் சடடவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்வேறு தரப்புக்களாலும் உரிய அதிகாரிகளுக்கு முறைப்;பாடுகள் செய்யப்பட்;டிருந்தன.
இந்நிலையில் குடமுறுட்டி பாலத்திற்கு அருகாக சட்டவிரோதமான பாதையொன்று அமைக்கப்பட்டு அந்தப்பாதையூடாக பெருமளவான மணல் அகழ்வு மேற்கொள்வது தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ,ஏ.ஆனந்தராஜா நேரடியாக சென்று சடடவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்ற இடங்;களை பார்வையிட்;டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு உத்தரவிட்;டுள்ளார்.
இதேவேளை கரைச்சிப்பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் பூநகரி பிரதேச செயலர் எஸ்.கிருஸ்னேந்;;திரன் மற்றும் கிளிநொச்சி பூநகரி பொலிசார் ஆகியோரும் இதில் சமுகமாகியிருந்தனர் குறிப்பிடத்தக்கது.
இவ்;வாறு என்றுமில்லாதவாறு சட்டவிரோத மண் மேற்கொள்வதனால் பெருமளவான விவசாய நிலங்கள் உவர் நிலங்களாக மாறுவதுடன்  சூழல் சமநிலைகளும் பாதிக்கப்படுகின்றது குறிப்பிடத்;தக்கது.
Facebook Comments