வீதி விபத்தில் இரண்டு இளைஞா்கள் பலி

கிளிநொச்சி ஏ9 வீதியில் ஆனையிறவு பகுதியில் நேற்று 04-09-2016 இரவு ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கிச் பயணித்த ஹயஸ் ரக வாகனமும்  கிளிநொச்சியிலிருந்து யாழ் நோக்கிச்  உந்துருளியில்  பயணித்த இளைஞனும் நேருக்கு நோ்  மோதியதில்  இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்

இதன் போது இளைஞன் வாகனத்தின் முன்புற கண்ணாடியில் தலைக் கவசத்துடன் உட்புகுந்து தொங்கிய  நிலையில் பலியாகியுள்ளார் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததோடு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

சம்பவத்தில் பலியான இளைஞன் வடமாராட்சி கிழக்கு உடுத்துறையைச் சோ்ந்தவா் என்று தெரியவந்துள்ளது.

அத்தோடு இன்று திங்கள் மாலை மல்லாவியில் இடம்பெற்ற விபத்தில் உந்துருளியில் பயணித்த  இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

உந்துருளியில் வேகமாக சென்றபோது உந்துருளி வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது குறித்த  இளைஞன் மின்சார கம்பத்துடன் மோதுண்டு இரண்டு தூண்களுக்கு இடையில் சிக்கிய நிலையில் இறந்துள்ளார்.

சடலம் மல்லாவி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனா்.

Facebook Comments