மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே iPhone-7, iPhone-7 Plus மற்றும் அப்பிள் வாட்ச் சீரியஸ்-2 ஆகியவையை அப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

அப்பிள் நிறுவனம் வெளியிடும் iPhone மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனைவராலும் விரும்பிப் பயன்படுத்தப்படும் iPhone-ன் மேலும் மூன்று மாதிரியை செப்டம்பரில் அறிமுகப்படுத்த உள்ளதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இன்று அப்பிளின் புதிய மாடல்களான iPhone-7, iPhone-7 Plus, மற்றும் வாட்ச் சீரீஸ் 2 மொடல்கள் அறிமுகப்பட்டுத்தப்பட்டன. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த அறிமுக விழாவில் அப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம்குக் ஐபோன்களை அறிமுகம் செய்து வைத்தார்.

விழாவில் அப்பிள் வாட்ச் சீரியஸ்-2 வரிசையில் வாட்டர் புரூப் தன்மை கொண்ட வாட்ச், நைக் நிறுவனத்துடன் இணைந்து தடகள வீரர்களுக்காக சிறப்பு வாட்ச் ஆகியவை ஒவ்வொன்றாக அறிமுகம் செய்யப்பட்டது.

iPhone-7 வாட்டர்- டஸ்ட் புரூப் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செல்போன் ஜெட் பிளாக், பிளாக், கோல்ட், சில்வர், ரோஸ் கோல்ட் ஆகிய வண்ணங்களில் வெளியாகிறது.

iPhone-7 Plus-ல் பின்பக்க கமெரா 12 மெகா பிக்சல் தரத்தில் 2 லென்ஸ் உடன் வெளியாகியுள்ளது. இந்த 2 லென்ஸ் 56.எம்.எம்., ஆப்டிகல் சூம் வசதிக்காக ஒரு லென்ஸும், வைட் ஆங்கிள் வசதிக்காக மற்றொரு லென்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது. iPhone-7 விலை 649 டொலர் எனவும் iPhone-7 Plus 769 டொலர் விலை எனவும் அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கணணியில் பிரபலமான சூப்பர் மேரியோ விளையாட்டை iPhone-7-ல் விளையாடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பிள் வாட்ச் சீரியஸ்-2 விலை 369 டொலர் ஆகும். முந்தையை அப்பிள் வாட்ச் சீரியஸ்-1 ன் விலை 269 டொலர் ஆகும்.

முன்னதாக அப்பிள் நிறுவனம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபோன் 6 மற்றும் 6 எஸ் போன்கள் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments