_mg_0009விஜயகலா மகேஸ்வரனின் உறுதிமொழியையடுத்து பரவிப்பாஞ்சான் உண்ணாவிரதம்கைவிடப்பட்டது.

தங்களுடைய அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையைமுன்வைத்து உண்ணாவிரத பேராட்டத்தில் ஈடுபட்டு வந்து பரவிபாஞ்சான் மக்களுக்குஇராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் மூன்று மாத்திற்குள் காணியைமீளப்பெற்றுத் தருவதாக உறுதிமொழி வழங்கியதனை தொடா்ந்து உண்ணாவிரத போராட்டம்கைவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது

கிளிநொச்சி பரவிபாஞ்சான் மக்கள் தங்களின் அனைத்து காணிகளும் விடுவிக்க வேண்டும்எனக் கோரி தொடர்ச்சியாக ஏழு நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மக்கள் நேற்று புதன்கிழமை எட்டாவது நாள் முதல் உண்ணாவிரத பேராட்டமாகமாற்றியிருந்தனர்.

இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த காணி உரிமையாளா்களில் கணவனைஇழந்த பெண் ஒருவா் நீரின்றி உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார்.

அவரது உடல்நிலை இன்று வியாழக்கிழமை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ்த் தேசிய மக்கள்முன்னணியின் பொதுச் செயலாளா் கஜேந்திரகுமார் நேரில் சென்று பார்வையிட்டதோடுதன்னால் வாக்குறுதிகள் எவையும் வழங்க முடியாது என்றும் ஆனால் உண்ணாவிரதபோராட்டத்திற்கு ஆதரவாக செயற்பட முடியும் எனவும் தெரிவிந்திருந்தார்.

இதனை தொடா்ந்து சிறுவா் மற்றும் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சா் விஜயகலாமகேஸ்வரனின் மூன்று மாத்திற்குள் காணிகள் மீளப்பெற்றுக் கொடுக்கப்படும் என்றதொலைபேசி மூலமான உறுதிமொழியை அடுத்து உண்ணாவிரத்தில் ஈடுபட்ட மக்கள் தங்களதுபோராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

அத்தோடு எதிர்வரும் திங்கள் தான் நேரில்வருகை தந்து மக்களுடன் மக்களின் விடுவிக்கப்படாத காணிகளுக்கு சென்றுபார்வையிடுவதாகவும் இராஜாங்க அமைச்சா் மேலும் தெரிவித்துள்ளார்.

தங்களது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என ஆரம்பத்தில் போராட்டத்தில்ஈடுபட்ட மக்கள் மாவட்டத்தின் அரச உயரதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியையடுத்துபோராட்டத்தை வைிட்டனர்.

பின்னா் உறுதிமொழி நிறைவேறாத நிலையில் மீண்டும்போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும்எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஆகியோர் உறுதிமொழி வழங்கினார்கள்.

ஆனால் அதுவும்நிறைவேறாத நிலையில் மக்கள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்து உண்ணாவிரதமாகமாற்றினார்கள்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதன் உறுதிமொழிவழங்கியிருந்தார். அந்த உறுதி மொழியையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.

இவ்வாறான பல உறுதிமொழிகள் மீறப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில் இன்றைய தினம் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் உறுதிமொழிவழங்கப்பட்டுள்ளமையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது_mg_0046

_mg_0049

_mg_0013

_mg_0004

_mg_0009

Facebook Comments