09-09-2016-01யாழ்ப்பாணம் புதிய பொலிஸ் நிலையத்தின் கட்டிடம் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

புதிய பொலிஸ் நிலைய கட்டிட தொகுதியானது 3 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளதுடன் கட்டிட நிர்மாண பணிகள் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.

இதற்காக 484 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளதுடன் புதிய கட்டிடத் தொகுதியில் நிர்வாக பிரிவு, சிறு குற்றப்பிரிவு, குற்றத் தடுப்பு பிரிவு, போக்குவரத்து பிரிவு ஆகியன உள்ளடங்குகின்றன.

அத்துடன் 250 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தங்குமிடம், போசன சாலை, நிலைய பொறுப்பதிகாரியின்  உத்தியோக மற்றும் சிரேஸ்ட கட்டளையிடும் அலுவலகர்களுக்கான சுற்றுலா விடுதி இரண்டும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில்  வடமா
காண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடமாகாண சபை உறுப்பினர்கள், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலச்சாமி இராதாக்கிருஸ்ணன், சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆகியோரும் கலந்து கொண்ட னர்

09-07-2016-02

09-09-2016-04

Facebook Comments