கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேறியுள்ளனர்.

தற்போது சுமார் பத்து ஏக்கர் காணியே இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு இராணுவத்தினர் துயிலுமில்லத்தில் இரவோடு இரவாக இரண்டு அடுக்கு வேலிகள் அமைத்து முகாம் அமைத்திருந்தனர்.

இந்த நிலையில் மாவீரர் துயிலுமில்லம் அன்று தொடக்கம் இன்று வரை கல்லறைகளுக்கு மேல் கழிப்பறைகளும், சமையலறைகளும், அமைக்கப்பட்டு இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தனர்.

தற்போது கடந்த வாரம் முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் விடுவிக்கப்பட்டநிலையில் தற்போது கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லமும் விடுவிக்கப்பட்டுள்ளது.

அங்கு நிலைகொண்டிருந்த படையினர் நேற்று முன்தினம் முதல் படிப்படியாக வெளியேறியுள்ளனர்.

எருக்கன் பற்றைகளால் சூழ்ந்து காணப்படும் மாவீரர் துயிலுமில்லத்தில் கல்லறைகள் உடைக்கப்பட்டு பொது மக்களின் காணிகளுக்குள்ளும், மாவீரர் துயிலுமில்லம் காணியிலும் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லம் காணியை அமைதியான முறையில் பேணுவதற்கும், அங்கு முதற்கட்டமாக மரங்கள் நாட்டப்பட்டு பசுமை பிரதேசமாக மாற்றியமைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் பொது மக்கள் கோருகின்றனர்.14292481_1184833904907417_4125317187167725058_n 14199724_1184834374907370_8774909338714414012_n 14212767_1184832868240854_8631627735627718351_n

Facebook Comments