_mg_0025வட மாகாண முதலமைச்சர் தலைமையிலான் குழுவினர் நேற்று மாலை திங்கள் கிழமை இரணைமடு குளத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகள் குறித்தும், அதற்கு ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.
திங்கள் மாலை இரணைமடுவுக்கு விஜயம் மேற்கொண்ட முதலமைச்சர் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகள் குறித்தும் அதற்கு தற்போது ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளினால் வழங்கப்பட்ட விளக்கங்களை கேட்டறிந்துகொண்ட பின்னர் நேரடியாக குளத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளையும் நேரில் பார்வையிட்டுள்ளார்.
இரணைமடுகுளத்தின் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குறித்த அபிவிருத்திக்கு தேவையான மணலை குளத்தின் நீரேந்து பகுதிகளில் இருந்து பெற்றுக்கொள்வதில் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் மூன்று வனவளத் திணைக்களம், கனியவள திணைக்களம், தொல்லியல் திணைக்களம் என்பன தடை ஏற்படுத்தியமையினால் அபிவிருத்திப் பணிகளுக்கு தடை ஏற்பட்டது. பெரும் சர்ச்சை நிலவியது இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மணலை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அபிவிருத்தியின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சரால் ஆராயப்பட்டது.

இந்த விஜயத்தின் போது அமைச்சர்களான ஜங்கரநேசன்,குருகுலராஜா, பாராளுமன்ற உறுப்பினா் சிறிதரன், வட மாகாண எதிர் கட்சி தலைவா் தவராசா, மாகாண சபை உறுப்பினா்களான அரியரட்ணம், சிவாஜிலிங்கம், தவநாதன், முல்லைத்தீவு அரச அதிபா் திருமதி றூபவதி கேதீஸ்வரன் விவசாய அமைச்சின் செயலாளா்  நீா்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்துகெண்டனா்.

தா்மலிங்கம் சிவா

unnamed

_mg_0073

_mg_0054

 

Facebook Comments