இயக்கத்தில் இருக்கும்போது தமிழினிக்கு புற்றுநோய் 

உண்மைக்குப் புறம்பானது என்கிறார் தாயார்

 
தமிழினிக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருக்கும்போது  புற்றுநோய்   உண்மைக்குப் புறம்பானது என்கிறார் தாயார்
 

 
இன்றையதினம்  விடுதலைப்புலிகளின் மகளீர் அரசியல்த் துறைப் பொறுப்பாளாராக இருந்த தமிழினி அவர்களின் தாயருடனான  நேர்காணலின் போதே  அவர்  அவ்வாறு தெரிவித்தார் 
 
அவர் மேலும் தெரிவிக்கையில்  விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருக்கும் போது  எனது மகள் தமிழினிக்கு புற்றுநோய் இருந்ததாக முன்னாள் போராளி ஒருவர்    வவுனியாவில் நடைபெற்ற நல்லிணக்கப் போறி முறைக்கான சாட்சியம் அளிக்கும் நிகழ்வில் சாட்சியம் அளித்ததனை  காணொளிகள் மூலமாகப் பார்த்தேன் அத்துடன்  வடக்குமாகாண சபை    அமைச்சர் ஒருவர்   கூறியதனையும்  தொலைக்காட்சி வாயிலாகவும்  பார்வையிட்டேன்  அவ்வாறு   எனது மகளிற்கு புற்றுநோய் இருக்கவில்லை  என  நான்  கூறுகின்றே அதனை அவர்களால் நிரூபிக்க முடியுமா  என கேள்வியினைத்  தொடுத்த  அவர் அவ்வாறு  ஏற்கனவே  அவரிற்கு புற்றுநோய்  இருந்த விடையம்  இதனைத் தெரிவித்த  அவர்களுக்கு   தெரியும்  என்றால் ஏன் அதனை எனக்கு முதலே  கூறவில்லை என்ற பல கேள்விகளைத் தொடுத்திருந்தார் 
 
அதனை தொடர்ந்து  அதற்கு நீங்கள் உங்கள் மகள் தமிழினி  விச ஊசி ஏற்றப்பட்டுத்தான் இறந்தார் என கூறுகிறீர்களா என எமது செய்தியாளர் தொடுத்த கேள்விக்குப்  பதிலளித்த அவர் 
 
 
நான்  எனதுமகள்  விச ஊசி ஏற்றப்பட்டு இறந்தாரா அல்லது யுத்தத்தின் பின்னர் புற்றுநோய் வந்துதான் இறந்தாரா என நான் வாதிட வரவில்லை  ஆனால் எனது மகள் தமிழினிக்கு விடுதலைப்புலிகள் காலத்தில் புற்றுநோய் இருந்தது என்பதனை ஏற்றுக்கொள்ள என்னால் மட்டுமல்ல யாராலும் முடியாது ஏன் எனில்  தமிழினிக்கு  விடுதலைப்புலிகள் காலத்தில் புற்றுநோய் இருந்தது என்ற கருத்தைப் பார்த்தால் 2006 ம்  ஆண்டிற்கு முற்பகுதியில் இருந்திருக்க வேண்டும் அவர் இறந்தது 2015 ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் பூரண சிகிச்சை உரிய முறையில் பெற்றால் மாத்திரமே அக் கொடிய நோயிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் சில வேளைகளில் அதுவும் பயனளிப்பதில்லை  சிகிச்சை எதனையும் பெற்றுக் கொள்ளாத தமிழினி  ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்தால் எவ்வாறு இவளவு வருடக்கணக்கில் உயிருடன் இருந்தார் என சிந்திக்க வைக்கும் கேள்வி ஒன்றினையும் எழுப்பி இருந்தார் 
 
அவர் மேலும் தெரிவிக்கையில் அரசியல் இலாபங்களுக்காக எங்களைப் பாவிக்காதீர்கள் எனது மகள் இறந்து விட்டாள் அதனை அப்படியே விட்டுவிடுங்கள் உண்மைக்குப் புறம்பான  செய்திகளை வெளியிடாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டார் அத்துடன் எனது மகள் புற்றுநோயால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளை வைத்திய சாலை சென்று பார்வையிட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் உதவி கேட்டிருந்தேன் எங்களுக்கு அவர் உதவ வேண்டும் என்ற உரிமையுடன் கேட்டிருந்தேன்  அவர் இரண்டு மூன்று தரம்  மகளைப் பார்வையிடச் செல்ல   சிறியளவு பண உதவியினைச் செய்தார் அது அவ் வேளைகளில் பெரிய உதவியாக இருந்தது    அத்துடன் வைத்திய சாலையிலும் சென்று பார்வையிட்டிருந்தார்  அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் சில சிறிய உதவிகளைச் செய்திருந்தார் நான் எதனையும் மறக்கவில்லை இப்பொழுது நான் எங்கும் செல்வதில்லை செல்ல வேண்டிய தேவையும் இல்லை ஏன் எனில்  நான் ஒரு சிறிய கடை ஒன்றினை அமைத்து அதில் வரும் வருமானத்தில் நானும்  எனது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சாப்பிட்டு எமது வாழ்க்கை என வாழ்ந்து வருகின்றோம் எம்மை பொய்யான தகவல்களை வெளியிட்டு  உடைந்து போயுள்ள மனங்களை மீண்டும் மீண்டும் உடைக்காதீர்கள்  எனவும் கேட்டுக் கொண்டார்
Facebook Comments