யாழ்ப்பாண நீதிபதி இளஞ்செழியனின் பெயரில் போலி பேஸ்புக் ஒன்று உலா வருகின்றது. அந்த பேஸ்புக் நீதிபதி இளஞ்செழியனின் உத்தியோகபுர்வ பேஸ்புக் என நினைத்து பல முக்கியஸ்தர்களும் அந்த நட்பு வட்டத்தில் இணைந்திருந்துள்ளனர்.
தற்போது இந்தப் பேஸ்புக் முடக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பாக நீதிபதி இளஞ்செழியன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

திரு. இளஞ்செழியன் ஐயாவிடம் இருந்து முக்கியமான ஒரு தகவல்
“அன்பு நண்பர்களே ,
இது என் பெயரில் Nayagan Manikkavasagam Ilanchezhiyan உருவாகி இருக்கும் பொய்யான முகநூல் கணக்கு தொடர்பானது, இன்று வரை எனக்கென்று பிரத்தியோகமாக எந்த முகநூல் கணக்குகளும் இல்லை , எனவே தயவுசெய்து இப் பொய்யான முகநூல் கணக்கு தொடர்பாக முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலும் இவ்விடயம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன்..
தயவுசெய்து இத்தகவலை பகிரவும்.

நன்றி
திரு. இளஞ்செழியன் ”

An urgent message from Hon. Judge. Mr. Ilancheliyan

Dear Friends,
This is regarding a fake facebook account created under the name of mine Nayagan Manikkavasagam Ilanchezhiyan, I dont have any official facebook account / fan page. I definitely take a legal action against person who handle this fackbook. PLEASE REPORT FOR THIS FAKE FACEBOOK ACCOUNT AND SHARE THIS MESSAGE.
Thanks for your support
Hon. Judge. Ilancheliyan

2016-09-20-06-24-03

இதே வேளை குறித்த பேஸ்புக் இளஞ்செழியன் ஐயாவுடையது என நம்பி பல இரகசியத் தகவல்களும் இந்த பேஸ்புக் ஊடாக பலர் அனுப்பியிருக்கலாம் எனவும் அதனை யார் கண்காணித்தார்கள் என்பது தொடர்பாக பெரும் அச்சம் நிலவுவதாகவும் குறித்த முகப்புத்தகத்தில் நண்பர்களாக இருந்த சிலர் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments