கிளிநொச்சி பொதுச்சந்தை  வழமைபோல் நாளை இயங்கும் என

கரச்சி பிரதேச சபைச் செயலாளர் தெரிவித்துள்ளார்
நாளையதினம்  கிளிநொச்சி  பொதுச்ச்சந்தையினை  மூடவேண்டும் என சந்தை வர்த்தக   சங்கத்தினரால்  விடுக்கப்பட்ட  கோரிக்கை  கிளிநொச்சி  கரச்சி பிரதேச சபைச் செயலாளர்  கம்சநாதணினால்   மறுக்கப்பட்டுள்ளது
குறித்த  வேண்டுகோள் தொடர்பாக  அவர்  தெரிவித்துள்ளதாவது கடந்த பதினாறாம்  திகதி ஏற்ப்பட்ட பாரிய தீவிபத்தினால் தமது வாழ்வாதரத்தினை தொலைத்து  மீண்டுகொண்டுள்ள  சந்தைவர்த்தகர்கள்  கடைகளை அடிப்பதனால் அவர்களது  வாழ்வாதாரம் இன்னமும்  பாதிக்கப்படும்  அதனால்  கிளிநொச்சி பொதுச் சந்தை நாளையும் வழமைபோல் நடைபெறவேண்டும்  என  தெரிவித்துள்ளார்  ஆனால்  அவர்கள்  தனிப்பட்ட  ரீதியில்  குறித்த  பேரணிக்கு ஆதரவு வழங்குவதானால்  அமைதியான முறையில்  வழங்க  முடியும் எனவும் ஆனால்  சந்தை  வழமைபோல்  நடவடிக்கைகள் நடைபெற வேண்டும எனவும் தெரிவித்துள்ளார்

குறித்த  சம்பவம் தொடர்பாக  கிளிநொச்சி  நகர  வர்த்தக சங்கத்தினரிடம்  நாளை  கிளிநொச்சியில்  கதவைப்பு  இடம்பெறுமா  என  எமது செய்தியாளர் வினவிய போது  தமக்கு  குறித்த கதவடைப்பு

சம்பந்தமாக  தமக்கு எவ்வித தகவல்களும் வழங்கப்பட வில்லை  எனவும் எனவே  அனைத்துக் கடைகளும் வழமைபோல் திறக்கப்படும்  எனவும் தெரிவித்துள்ளனர்
Facebook Comments