கிளிநொச்சி – சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து நேற்று சனிக்கிழமை, கிபிர்க் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது

.நேற்றயதினம்  காலையில் குறித்த பகுதிக்கு  விறகு வெட்டுவதற்குச் சென்றவர்கள்  தர்மபுரம்  பொலிசாரிற்கு வழங்கிய தகவலினை அடுத்து  நேற்றைய தினமே  தர்மபுரம்  பொலிசாரால்  நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு ,  சம்பவ இடத்திற்கு சென்ற  விசேட அதிரடிப்படையினர் மற்றும் தர்மபுரம் பொலிசார் அடங்கிய குழுவினர் , குண்டை மீட்டுள்ளனர்.
 இவ்வாறு மீட்கப்பட்ட குண்டு,  6 அடி நீளமும் 300 கிலோ கிராம் எடை கொண்டதுமாகும் என விசேட அதிரடிப்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
 எனினும் குறித்த குண்டு வெடிக்காத நிலையில் செயலிழந்துள்ளதாகவும் இதனை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் நோக்கில் அதிரடிப்படையினர் அதனை மீட்டுச் சென்றுள்ளதாகவும் தர்மபுரம்  பொலிஸார் தெரிவித்தனர்  _mg_0040 _mg_0014
Facebook Comments