திலீபனின்  நினைவு  தினத்தை ஒட்டி இன்று  கிளிநொச்சியில் குருதிக்கொடை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  கிளிநொச்சி அலுவலகத்தின் ஏற்பாட்டில்  நடைபெற்ற தியாகதீபம் திலீபன்  அவர்களின்  நினைவு நிகழ்வும் குருதிக்கொடை வழங்கலும்  இன்று நடைபெற்றது
இன்றுகாலை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  கிளிநொச்சி அலுவலகத்தில் இளைஞர் அணித்தலைவர் சுரேன் தலையில்  அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய  நினைவு நிகழ்வில் திலீபனின்  திருவுருவப்படத்திற்கு  மலர்வணக்கங்கள் செலுத்தப்பட்டதுடன்   ,சிறப்புரைகள்  என்பனவும்   இடம்பெற்றன  அதனைத்  தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  கிளிநொச்சி அலுவலகத்திலையே  கிளிநொச்சி பொது வைத்திய சாலையின் இரத்த  வங்கிப் பிரிவினர் வரவழைக்கப்பட்டு குருதிக்கொடை நிகழ்வும் நடைபெற்றது
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி . சிறிதரன் , வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்  dsci1841 dsci1851 dsci1853 dsci1859 dsci1864 dsci1868 dsci1839 dsci1840
Facebook Comments