இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 82 கிலோக்கிராம்  கேரளா கஞ்சா மருதங்கேணியில் மீட்பு

இந்தியாவில்  இருந்து  கொண்டுவரப்பட்டதாக  சந்தேகிக்கப்படும் எண்பத்தி  இரண்டு  கிலோக்கிராம்  கேரளா கஞ்சா  மருதங்கேணி கடற்கரையில்  வைத்து  பளைப் பொலிசாரால்  இன்று மீடக்கப்பட்டுள்ளது  எனினும்  சந்தேகநபர்கள்  தப்பிச் சென்றுள்ளதாக பளைப் போலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன
குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது
இந்தியாவில்  இருந்து கடல் வழியாக கேரள கஞ்சா  ஒரு தொகுதி மருதங்கேணி  கடற்பரப்பினூடாக கொண்டுவருவதாக பொலிசாருக்கு  கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து கிளிநொச்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் றோசான் ராஜபக்ச  மற்றும் பளைப் பொலிஸ் பரிசோதகர் அடங்கிய குழுவினர்  குறித்த பகுதிக்குச் சென்று மருதன்கேணி கடற் கரையில் இருந்த   எண்பத்தி  இரண்டு  கிலோக்கிராம்  கேரளா கஞ்சாவினை  மீட்டுள்ளனர் இருப்பினும்  சந்தேக நபர்கள் யாரும் பொலிசாரால் கைதுசெய்யப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
kg-kili-1 kg-kili-2 kg-kili-3
Facebook Comments