சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின் போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் நினைவாக 2015 உயர்தர பழைய மாணவர் அணியின் ஏற்ப்பாட்டில் கிளிநொச்சியில் இரத்ததான முகாம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இடம்: பழைய வைத்தியசாலை மண்டபம்,கிளி நொச்சி
காலம்:01.10.2016 (சனிக்கிழமை)
நேரம்:காலை 9.00 – மாலை 4.00 மணிவரை
அன்புக்கினியவர்களே !
“தானங்களில் சிறந்த தானம் இரத்த தானம்” என்ற முதுமொழிக்கு அமைய  வருடம் தோறும் இரத்த தான முகாம் ஒன்றை 2015 உயர்தர பழைய மாணவர் அணியினர் செய்து வருகின்றனர். அதே போல் இவ்வருடம் மூன்றாவது முறையாக நடைபெறுவது பெருமைக்குறியது.
கிளி நொச்சி மாவட்ட வைத்திய சாலையில் ஏற்ப்பட்டிருக்கும் இரத்த பற்றாக்குறையை நீக்குவதற்ற்கு கிளி நொச்சி வாழ் மக்கள் என்ற சார்பில் நீங்களும் அவர்களுடன் இணைந்து அந்த மகத்தான இரத்த தான முகாமில் கலந்து கொண்டு குருதிக்கொடையாளர் ஆகுங்கள்.

Facebook Comments