கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் சாம்பல் மேட்டில் நின்று புலம்பெயர் உறவுகளை நோக்கி உருக்கமான வேண்டுகோள்
கடந்த 16-09-2016 அன்று ஏற்பட்ட தீ காரணமாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்து சாம்பல் மேட்டில் நின்று தங்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு கிளிநொச்சி பொதுச் சந்தை வர்த்தகர்கள் புலம் பெயர் உறவுகளிடம் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
30-09-2016 இன்று கிளிநொச்சி சந்தையில் பத்திரிகையாளர்களை சந்தித்தே அவர்கள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர். கிளிநொச்சி சந்தை  வர்த்தக அபிவிருத்திச் சங்கத்தி;ன தலைவர் அ .யேசுராஜன், செயலாளர் இ. கிருஸ்ணராசா, பொருளாளர் சு.ஜீவராஜ் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்கள் சிலர் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்;டே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிகையில் தெரியப்படுத்தியுள்ளதாவது
சாம்பல் மேட்டில் இருந்து ஒர் உருக்கமான வேண்டுகோள்!
அன்பாhந்த உதவும் உறவுகளே!
  கடந்த 16-09-2016 அன்று கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரீய தீ காரணமாக முழுமையாகவும், பகுதியளவிலுமாக 124 வியாபார நிலையங்கள்  அழிவடைந்துள்ளன.
யுத்தமும்;, அதனால் ஏற்பட்ட இடப்பெயர்வும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிர் உடமைகள் இழப்பும் எனப் பல்வேறு அழிவுகளிலிருந்து ஓரளவுக்கு மீண்டு வங்கிகள், நிதி நிறுவனங்கள், மொத்த வியாபாரிகள் ஆகியோரிடம் கடன்களை பெற்று கடன் முதலீட்டுடன் எங்களுடைய வியாபாரத்தை ஆரம்பித்தோம். இதன் மூலம் இனிமேலாவது எங்கள் வாழ்வில் சிறிய முன்னேற்றத்தையாவது எட்டமுடியும் என நம்பினோம்.
முன்னேற்றப் பாதையில் ஓரு சில அடிகளை எடுத்து வைக்க முன் தீ எல்லாவற்றையும் முற்றுமுழுதாக அழித்துவிட்டது. ஆகவே  எமது ஒரேயொரு வாழ்வாதாரமாக இருந்த கடைகள் இன்று சாம்பல்  மேடாக காட்சியளிக்கிறது.
பல தடவைகள பல அழிவுகளுக்கு முகம் கொடுத்து மீண்ட கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகளாகிய நாம் தற்போது மீள முடியாத அளவுக்கு தீ எல்லாவற்றையும் எரித்து சாம்பலாக்கியுள்ளது. எங்களுடைய வியாபாரிகள் இனி உதவிகள் இன்றி வழமைக்கு திரும்ப முடியாத நிர்க்கதியான நிலையில்  நம்பிக்கையற்று காணப்படுகின்றனர். ஆகவே எமக்கு  தற்போது இருக்கின்ற ஒரேயொரு நம்பிக்கை என்பது நீங்கள் நீட்டுகின்ற கருணைமிக்க உதவிக்கரமே!.
கடன் சுமையை தாங்க முடியாது தத்தளிக்கும் உறவுகளுக்கு கை கொடுத்து உதவுங்கள் எனக்கேட்கின்றோம்.
 இந்த உருக்கமான வேண்டுகோளை கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகள் சாம்பல் மேட்டில் இருந்து உரிமையுடன் புலம்பெயர் எம் உறவுகள், புலம்பெயர் பொது அமைப்புகள், மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியோரிடம் கோருகின்றோம். உங்களால் முடிந்த உதவிகளை நேரடியாக சந்தை வர்த்தக சங்கத்தின் ஊடாக  மேற்கொள்ளுங்கள். எமக்கான  உதவிக்கரத்தை நீட்டுவோர் கிளிநொச்சி சந்தை வர்த்தக சங்கத்துடன் நேரடியாகவோ,தொலைபேசி ஊடாகவோ தொடர்பு கொண்டு,  சங்கத்தின் கணக்கு இலக்கத்திற்கு உதவுங்கள்.
தங்களுக்கு எமது மனமர்ந்த நன்றிகள்
தலைவர்,செயலாளர்,பொருளாளர்
வர்த்தக அபிவிருத்திச் சங்கம் சேவை சந்தை கிளிநொச்சி.
இலங்கை வங்கி கிளிநொச்சி
நடைமுறை கணக்கு இல.79718505
img_6917 img_6903 img_6925 img_6897
Facebook Comments