பேரூந்தில் கடத்தப்பட்ட  நான்குலட்சம் பெறுமதியான மரக்குற்றிகளுடன்  மூவர் கைது

 

பேரூந்து  ஒன்றில்  கடத்தப்பட்ட சுமார்   நான்குலட்சம் பெறுமதியான மரக்குற்றிகளுடன்  இன்று அதிகாலை கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப்  பொலிஸ்மா அதிபரின் விசேட பிரிவினரால்  சந்தேக நபர்கள்   மூவர் கைது  செய்யப்பட்டுள்ளனர்

 

குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது

கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப்  பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின்படி  உதவிப்  பொலிஸ் பரிசோதகர் இந்து பிரதீபன், பொ.சா 20167 லால் குமார, சிறி பொ.கொ 57193 ஏக்கநாயக்க,79758  சோமரட்ன,89047 சியாம்,5441  சிவஐங்கரன் ஆகியோர் கொண்ட சிறப்பு குழுவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலை அடுத்து

இன்று அதிகாலை 3.45 மணியளவில் வடகாடு மாங்குளம் காட்டுப்பகுதியில் வைத்து    கிளிநொச்சி யாழ்ப்பாணம் வழித்தடங்களில் பயணிக்கும் பேரூந்து ஒன்றில்  கடத்தப்பட்ட  சுமார்   நான்குலட்சம்  பெறுமதியான   12  அடி நீளமான 6×4அளவுடைய 55 பாலை   மரக்குற்றிகளுடன்  சந்தேக நபர்கள் மூவரையும் குறித்த குழுவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனimage-0-02-06-e8c732a1b7f55b8000343ebdec2af43e89ba6eef8817cd42f64993e198db6026-v image-0-02-06-f8fcbe153ea3f2fac3a49c2d347f6dfc08601fbd604666fe0d63b31b92ac1316-v

Facebook Comments