அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளவரை அடையாளம் காணமுடியாத நிலையில் கிளிநொச்சி பொலிசார்

இன்று இரண்டு பதினைந்து மணியளவில் கிளிநொச்சி பரந்தன் சந்திக்கு அருகாமையில் ஏற்ப்பட்ட விபத்தில்  காயமடைந்த நிலையில்  கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அணுமதிக்கப் பட்ட சுமார் முப்பது வயதான ஆண்  ஒருவர் இதுவரை அவரது உறவினர் எவரும் வராத நிலையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகின்றார்  அவரது உறவினர்கள் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தினை தொடர்பு கொள்ளுமாறு கிளிநொச்சிப் பொலிசார் கேட்டுக் கொள்கின்றனர்
குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது இன்று இரண்டு பதினைந்து மணியளவில் கிளிநொச்சி பரந்தன் சந்திக்கு அருகாமையில் கிளிநொச்சியில் இருந்து  பரந்தன் நோக்கி சென்றுகொண்டிருந்த டாட்டா பிக்கப் ஒன்றும் அதே திசையில் சென்றுகொண்டிருந்த துவிச்சக்கர வண்டியும் மோதுண்டதில்  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது இருப்பினும் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தவர்  குறித்த இரண்டு வாகனத்திற்கும் பின்னால் வந்து கொண்டிருந்த அரச பேருந்தின்  இரண்டு சில்லுகளிற்கும் நடுவில் இருந்தே பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்திய சாலை அவசர சிகிச்சைப் பிparanthan5 paranthan6 paranthan1 paranthan2 paranthan3 paranthan4ரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன
 இவர் துவிச்சக்கர வண்டியில் பரந்தன் சந்திக்கு அருகாமையில் பயணித்துக் கொண்டிருந்தமையினால் அவர் பரந்தன் பகுதியையோ அல்லது கிளிநொச்சி பகுதியையோ சேர்ந்தவராக இருக்க முடியும் என பொலிசார் சந்தேகிக்கின்றனர் இவரது உறவினர்கள் இருப்பின்  கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தினைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்
Facebook Comments