இரணைமடு குளத்தின் நிர்மாணப் பணியில் ஈடுபட்ட இளைஞன்   பலி
கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த  இளைஞன்  மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் 03.10.2016 இன்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றதாக  அங்கிருக்கும்  எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்
அவசரஅவசரமாக இரவு பகலாக  புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் இப்பணியில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த  22 வயதுடைய    கனகராசா கோபிநாத்  என்பவரே  இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். என கிளிநொச்சிப் பொலிஸ்  வட்டாரத்தகவல்கள்  தெரிவிக்கின்றன
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Facebook Comments