சிறுவா் தினத்தை  முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வில் 96 பேர் இரத்ததானம் வழங்கியுள்ளனர்
மாணவா்களின் பாராட்டத்தக்க முன்மாதிரியான செயற்பாடு
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் 2015 ஆம் ஆண்டு மாணவா்களின் இரத்ததான முகாம் நிகழ்வு பாராட்டுக்குரிய முன் மாதிரியாimg_1052 img_1073 img_1085 img_1169 img_1215ன செயற்பாடு எனபலராலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி மாணவா்கள் சா்வதேச சிறுவா் தினத்தை  முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்திருந்னா். இதில் மாணவா்கள் உட்பட 96 போ் கலந்துகொண்டு  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு ஒவ்வொருவரும் ஒரு பொயின்ட் வீதம் இரத்தம் வழங்கியுள்ளனா்.
மேற்படி மாணவா்கள் தாங்களும் தங்களுடைய ஆசியா்கள், மற்றும் சமூக ஆா்வலா்கள், என அனைவரையும்  ஒன்று திரட்டி  ஒரு முக்கியப் பணியை மேற்கொண்டுள்ளனா்.
இதனை வருடந்தோறும் மேற்கொள்வதற்கும் அவா்கள் தீா்மானித்துள்ளனா்.
பெரும்பாலான இளம் சமூகத்தைச் சோ்ந்தவா்கள்  பல்வேறு சமூக புறழ்வுகளிலும், சமூக விரோத செயல்களிலும் ஈடுப்பட்டு வரும் நிலையில் மேற்படி இந்த மாணவா்களின்  சமூக நலச் செயற்பாடுகள் முன்மாதிரியான செயற்பாடாக பாராட்டப்பட்டுள்ளது.
Facebook Comments