கிளிநொச்சி காடொன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில்  சடலம் ஒன்று மீட்பு

கிளிநொச்சி யூனியன்குளம்  காட்டுப்பகுதியில்  இருந்து  உருக்குலைந்த நிலையில்  சடலம் ஒன்று  மீட்கப்பட்டுள்ளது
இன்று  குறித்த பகுதிக்கு விறகு வெட்டச் சென்றவர்களால்  கிளிநொச்சிப் பொலிசாருக்கு  வழங்கப்பட்ட  தகவலை அடுத்து குறித்த காட்டுப்  பகுதிக்குச் சென்ற  கிளிநொச்சிப் பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி தலைமையிலான  குழுவினர் முதலாம் கட்ட  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் _mg_0277 _mg_0278 _mg_0279 _mg_0288 _mg_0290 _mg_0291 _mg_0297 _mg_0303 _mg_0304 _mg_0310 _mg_0315 _mg_0267 _mg_0269
குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் சுமார்  அறுபத்தி ஐந்து  வயது மதிக்கத்தக்க  ஓர்  ஆண் எனவும்  அவர்  தன்வசம் வைத்திருந்த பொருட்களை பார்க்கும் போது  அவர் மனநலம்  பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என பொலிசார்  சந்தேகிக்கின்றனர்
குறித்தசடலமானது யூனியன்குளம் மக்கள் குடியிருப்பில் இருந்து  பல கிலோமீற்றர் தொலைவில் காட்டுப்பகுதியில் குறித்த சடலம்  இருப்பதாகவும்  குறித்த சடலம் உருக்குலைந்த நிலையில் துர்நாற்றம் வீசுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்  அத்துடன்  குறித்த பகுதியில்   மண்ணகழ்வு  மற்றும்   மரங்கடத்தல் போன்ற  சட்டவிரோத செயற்ப்பாடுகள் நடைபெறுவதற்கான தடையங்களும் இருப்பதாகத் தெரிவிக்கின்றார்
அத்துடன்  கிளிநொச்சி குற்றத் தடகவியல் பொலிசாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சோதனைகளையும் விசாரணைகளையும் ஆரம்பிக்க இருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்
Facebook Comments