கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு பிரான்ஸ் வர்த்தகர்கள் நிதி உதவி

கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரான்ஸ் –பாரிஸ் நகரைச் சேர்ந்த ஈழத் தமிழ் வர்த்தகர்கள் இணைந்து  32  பேருக்கு தலா 10ஆயிரம்  ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கியுள்ளனர்.

 

நிதி உதவி வழங்கும் நிகழ்வு நேற்று  திங்கட்கிழமை கிளிநொச்சி சந்தைக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

 

கடந்த 16 ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தினால் அங்கிருந்த 114 கடைகள் முற்றாக எரிந்துள்ள நிலையில், 222 மில்லியன் ரூவாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டது.

 

இதனால் பல்வேறு வங்கிக் கடன்கள் மற்றும் தமது உடைமைகளை அடகு வைத்து கடைகளை நடத்திய நிலையில் மோசமான நிதி நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள வியாபாரிகளுக்கு அரசாங்கம் உரிய நட்டஈடு வழங்கவில்லை என கவலை வெளியிட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் கிளிநொச்சி சந்தைக் கட்டிடத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு புலம்பெயர் தமிழ் உறவுகள் உதவி வழங்கி வருகின்றனர்.

 

.

 

இந்த நிலையில் தீயினால் கடைகள் எரிந்து நாசமாகியதனால், கடன் தொல்லையில் இருந்து மீளமுடியாதிருக்கம் 32 வர்த்தகர்களுக்கு பாரிஸ் நகரிலுள்ள ஈழத் தமிழ் வர்த்தகர்கள் உதவியுள்ளனர்.

 

தலா பத்தாயிரம் ரூபா வீதமான இந்த உதவிய  வட மாகாண சபை உறுப்பினர் பசுபதிப் பிள்ளையின் கோரிக்கைக்கு அமையவே இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்குஇன்று  செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்ட மருத்துவ, பொறியியல் பீட மாணவர்களால்   கற்றல் உபகரணங்கள்  வழங்கப்பட்டன.

gfg6 gfg8 gfg4

Facebook Comments