முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவநாதர் ஆரம்ப பாடசாலை முதலிடம்

சண்முகம் தவசீலன்
நேற்று வெளியான புலமைப்பரிசில் பரீட்சையில்   முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவநாதர் ஆரம்ப பாடசாலை முதலிடம் பெற்றுள்ளது இதனடிப்படையில்   மாணவர்கள் மூவர் 182 புள்ளிகளை பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாமிடத்தையும் 181 புள்ளியை பெற்று 04ம் இடத்தையும் பெற்றுக்கொண்டதோடு 34 பேர் சித்தியடைந்துள்ளனர்
செல்வன் மு.அபிசங்கர் செல்வன் மு.தேனகன் செல்வன் ச. புகழ்வேந்தன் ஆகியோர் 182 புள்ளிகளைப்பெற்று முதலிடத்திலும் செல்வி த.எழிலரசி 181 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் நான்காமிடத்திலும் உள்ளனர்
தொடர்ச்சியாக ஜந்து வருடங்களாக இப்பாடசாலை மாவட்ட ரீதியில் முதலிடத்தில் காணப்படுவதோடு இம்முறை
80 பேர் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 34 பேர் சித்தியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது 14484768_194254717669396_4912091310383693466_n dsc08126
Facebook Comments