கிளிநொச்சி தர்மபுர பகுதியில் மதுபோதை அருந்திய நிலையிலும் தவறான முறையிலும்உரிய ஆவணங்கள் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற இருவரை கிளிநொச்சிபொலிஸார் கைது செய்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

குறித்த குற்றவாளிகளுக்கு 16ஆயிரத்து 500 ருபாய் அபராதம்விதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவார காலம் சமுக சேவையில் ஈடுபடுமாறு கிளிநொச்சிமாவட்ட நீதிமன்றில் நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

இதேவேளை மதுபோதை அருந்திய நிலையில் சாரதி அனுமதிப்பத்திரம் வரிப்பத்திரமின்றிதலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற மற்றுமொரு நபருக்கு13ஆயிரத்தி 500 ரூபாய் அபாராதம் விதிக்கப்பட்டதுடன் ஒருவார காலம்சமூக சேவையில் ஈடுபடுமாறும் நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

Facebook Comments