jerman7கிளிநொச்சிக்கு ஜெர்மன் உயர்ஸ்தானிகர் இன்று விஜயம்

இன்று 10.10.2016 திங்கட்கிழமை  கிளிநொச்சி ஜெர்மன்  தொழிற் பயிற்சி  நிறுவனத்திற்கு  விஜயம் செய்த    இலங்கைக்கான  ஜெர்மன் உயர்ஸ்தானிகர் மற்றும் ஜெர்மன் நாட்டு முதலீட்டு நிறுவனம் ஒன்றும் இணைந்து   குறித்த தொழிற் பயிற்சி  நிறுவனத்தின் செயற்பாடுகள் என்ன  இங்கு எவ்வாறான  கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன இங்கு இவ்வாறான தொழில் முயற்சிகளுக்கு  முதலீடுகள்  எவ்வாறு உள்ளன  என்பது சம்பந்தமாக   கலந்துரையாடல்  ஒன்று இடம்பெற்றுள்ளது
அதனைத்தொடர்ந்து குறித்த  தொழிற் பயிற்சி  நிறுவனத்தின் கட்டட அமைவிடங்கள் கற்கை நிலையங்கள் , என்பவற்றை குறித்த குழுவினர்  பார்வையிட்டதுடன்  மாணவர்களிடமும்  பயிற்சி  நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் இருப்பிட வசதிகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டு  சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
tharmalingam.siva
jerman11
jerman10
jerman8
jerman7
Facebook Comments