_mg_0085புற்றுநோய் வைத்தியசாலைக்கான நிதியை சேகரிக்கும் நடைபயணம் கிளிநொச்சி  வந்தடைந்தது.

காலி கராப்பிட்டியவில் அமையவுள்ள புற்றுநோய் வைத்தியசாலைக்கான நிதியை சேகரிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள  நடைபவனியின் ஐந்தாம் நாள் நடை பயணம் இன்று 10.10.2016  கிளிநொச்சி இயக்கச்சியில் இருந்து அதிகாலை ஆரம்பமாகி இரணைமடுவில் நிறைவுற்றது.

இந்த  நடைபவனியின் விளம்பர தூதுவராக முன்னால் கிரிக்கட் வீரர் மகேல ஜெயவர்தன அவா்கள் கலந்துகொண்டுள்ளார்

ஐந்தாம் நாளான இன்று 10.10.2016 காலை கிளிநொச்சி ஐயக்கச்சியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நடை பயணம் ஏ-9 வீதியூடாக இயக்கச்சி,ஆனையிறவு, பரந்தன்,கிளிநொச்சி நகா் ஊடாக இரணைமடு சந்தியை வந்தடைந்து

கடந்த 2011ஆம் ஆண்டு தெய்வேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை முனை வரை மேற்கொள்ளப்பட்ட  நடைபவனியில் சேகரிக்கப்பட்ட நிதியில் யாழ். தெல்லிப்பளையில் புற்றுநோய் வைத்தியசாலை அமைக்கப்பட்டு தற்போது செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இதன் அடுத்த கட்டமாக தெற்கில் காலி கராப்பிட்டியவில் அமைக்கப்படவுள்ள புற்றுநோய் வைத்திய காலைக்கு நிதிப்பங்களிப்பை வழங்கும் நோக்கில் இந்த நடைபவனிமேற்கொள்ளப்பட்டு வருகிறது

கராப்பிட்டியவில் அமைக்கப்படவுள்ள புற்றுநோய் வைத்திய சாலைக்கு நிதிப்பங்களிப்பை வழங்கும் நோக்கில் சென்றுகொண்டிருக்கும்  நடை பயணத்தில் சிறியவா்கள் முதல் பெரியவா்கள் கலந்துகொண்டு உதவிகள் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

தா்மலிங்கம் சிவா

_mg_0089

_mg_0109

_mg_0099

_mg_0055

_mg_0086

 

Facebook Comments