பாடசாலை  காணி விவகாரம் போத்தல் குத்துக்குள்ளானவா் வைத்தியசாலையில்

கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியால  காணியில் அத்துமீறி குடியிருந்தும் நான்கு குடும்பங்களையும் அவா்களுக்க வழங்கப்பட்டுள்ள மாற்றுக் காணிகளுக்க செல்லுமாறு கரைச்சி பிரதேச செயலகம் கடிதம் அறிவித்துள்ளது.
 பாடசாலையின் அபிவிருத்திக்கு இடையூறாக இருக்காது பாடசாலை காணியை விட்டு நாங்கள் வெளியேறி எங்களுக்கு  வழங்கப்பட்டுள்ள மாற்றுக் காணிக்கு     செல்வதே பொருத்தமானது எனக் குறித்த காணியில் குடியிருக்கும் ஒரு கடும்பத்தைச் சோ்ந்த பிரமுகா் ஒருவா் பேச்சுவாா்த்தையில் ஈடுப்பட்டுள்ளாா்.
பாடசாலை கல்விச்  சமூகமும் குறித்த பிரமுகரை அழைத்தே அத்துமீறி குடியிருப்பவா்களுடன் பேசி தீர்வுக்கு வருமாறும் கோரியிருந்தது. அவரும் பாடசாலைக்கு சாா்பாக குடியிருப்பாளர்களுடன்  பேசியிருக்கின்றாா் தனது குடும்பமும்  பா டசாலை காணியை விட்டு வெளியேற போவகதாகவும் எனவே நீங்களும் வெளியேறுவது பொருத்தமானது என்றும் கூறியிருக்கின்றாா்.
இதனால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக  குறித்த நபா்  சோடா போத்தலினால் குத்தப்பட்டு காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்
பாடசாலை காணியில் குடியிருப்பவா்களுக்கு கிளிநொச்சி நகருக்கு அண்மையாக
ஏ9 வீதிக்கருகில் கணகாம்பிகைகுளத்தில் 20 போ்ச் வீதம் மாற்றுக் காணிகள் வழங்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Facebook Comments