யாழ்ப்பாணம் வரணி இடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்று மதியம் கிளிநொச்சியில்  உள்ள  அவரது கடையில் இருந்து புறப்பட்டவரை காண வில்லை என  கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது

குறித்த சம்பவம் தொடர்பாக  பொலிசாரிடம்  எமது செய்திப்பிரிவு  வினவிய போது

குறித்த வர்த்தகர் நேற்று மதியம் கடையிலிருந்து  வெளியில் சென்றவரை காணவில்லை இதுவரை வீடு வந்து சேரவில்லை  என்று கிளிநொச்சிப் பொலிஸ்  நிலையத்தில்  முறைப்பாடு  செய்யப்படுள்ளது  அவர் கடத்தப்பட்டாரா  அல்லது  காணாமல் போயுள்ளாரா  அல்லது தலைமறைவாக உள்ளாரா  என்ற எவ்வித பதிலையும்  எங்களால் கூறமுடியாது  ஆனால் பொலிஸ் நிலையத்தில் போடப்பட்ட முறைப்பாட்டுக்கு  அமைய   நாம் பல கோணங்களில் விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றோம்  என கிளிநொச்சிப்  பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Facebook Comments