எதிர்காலத்தில் அனைத்து  மாணவர்களுக்கும்  கரங்கொடுப்போம்
எதிர்காலத்தில் அனைத்து  மாணவர்களுக்கும்  கரங்கொடுப்போம் தமிழ்த்தேசிய மாணவர் பேரவையின் நிறுவுனர் ஆ.யோன்சன்

இன்று தமிழ்த்தேசிய மாணவர் பேரவையின் “விடியலை நோக்கி ” செயற்றிட்டத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட மு/குரவில் தமிழ் வித்தியாலயத்தில்   உள்ள போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று  வழங்கப்பட்டுள்ளது அந்நிகழ்வில்  கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்    தமிழ்  மாணவர்களின்  கல்வி வளர்ச்சியை நோக்காகக்  கொண்டு ஆரம்பிக்கப்பட்ட  இவ் தமிழ்த்தேசிய மாணவர் பேரவை யுத்தத்தினால்  மற்றும் தமது கல்வியை மேற் கொண்டு செல்ல முடியாமல் நிற்கின்ற  அனைத்து மாணவர்களையும் ஊக்குவிக்கின்ற செயற்ப்பாடுகளையே  நாம் செய்து வருகின்றோம்  இன்று இங்கு செய்யப்பட்ட  நிகழ்வு  ஒரு ஆரம்பமே  எதிர்காலத்தில் அனைத்து  மாணவர்களுக்கும்  கரங்கொடுப்போம் எனத்தெரிவித்தார்

.
இன் நிகழ்வில்
தமிழ்த்தேசிய மாணவர் பேரவையின் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன்  தமிழ்த்தேசிய மாணவர் பேரவையின் நிறுவுனர் ஆ.யோன்சன் மற்றும் வித்தியாலயத்தின் முதல்வர், ஆசிரியர்கள்  மாணவர்கள்  மற்றும் பேரவையின் முக்கிய உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
kli-3 kli-4 kli-5 kli-6 kli-7 kli-1 kli-2எதிர்காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கரங்கொடுப்போம்
Facebook Comments