வடமாகாண வீரர்களை தேசிய துடுப்பாட்ட  அணி  வீரராக  உருவாக்க வேண்டும்

கிளிநொச்சி மாவட்ட  துடுப்பாட்ட சங்கம் வேண்டுகோள்
  கிளிநொச்சி மாவட்ட  துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்ப்பாடிலும்  காவேரி கலாமன்றம் மற்றும் வன்னி கோப்பின் நிதிப்பங்களிப்புடனும்  நடைபெற  இருக்கும் கே .பி . எல்    ரி டுவன்ரி  துடுப்பாட்ட  போட்டிக்காக  இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பின் போதே அவர்கள் அவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்
அவர்கள்  மேலும் தெரிவிக்கையில்  எதிர்வரும் பதினைந்தாம் திகதி  கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில்  நடைபெறவுள்ள இப்போட்டுயில் வடக்கின் திறமைமிக்க இளைஞர்களைக்  கொண்டு இப்போட்டிகளை  நடத்த இருக்கின்றோம்  வடக்கின் சிறந்த வீரர்களைக் கொண்டு பல போட்டிகள்  நடைபெற்றுள்ளது இருப்பினும் வருடந்தோறும் எமது வடக்கு வாழ் இளைஞர் களைக் கொண்டு நடத்தப்படும் இப் போட்டியில் எமது துடுப்பாட்ட  வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர இருக்கின்றோம்  இதனைக் கருத்தில் கொண்டு திறமையாக பிரதிபலிக்கும் எமது வடக்கு வீரர்களை அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி இலங்கை தேசிய அணி   வீரராக  உருவாக்க வேண்டும் என  இலங்கை துடுப்பாட்ட கட்டுப்பாட்டுச் சபையிடம்  கோரிக்கையினையும்  விடுத்துள்ளனர்  அத்துடன்  தங்களால்  நடத்தப்படவுள்ள இவ் கே .பி . எல்    ரி டுவன்ரி  துடுப்பாட்ட  போட்டிக்காக  அணைத்து ஊடகங்களும்  அனுசரணையினை வழங்க வேண்டும் எனவும்  கேட்டுக்கொண்டனர் .
Facebook Comments