கிளிநொச்சியில் இலவச கணிணி, ஆங்கில  பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது
கிளிநொச்சி திருநகரில் கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தில் Think 2wice அமைப்பின் இலவச கணிணி மற்றும் ஆங்கில பயிற்சி நிலையம்  திற்நது வைக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்று கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் வுhiமெ 2றiஉந அமைப்பின்  இணைப்பாளர் நடராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க. முருகவேல்,கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் பத்மநாதன், தினக்குரல் கருணைப்பாலம் சுஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு  ஆரம்பித்து வைத்தனர்.
லிட்டில் எய்ட் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களாக தரமான  ஆறு மாத கால கணிணி கற்கை நெறியை இலவசமாக வழங்கி வருகிறது. இதில் கிட்டத்தட்ட ஜநூறுக் மேற்பட்ட மாணவர்கள் பயிறிச்சியை பெற்றுள்ளனர். அவர்கள் இன்று மீண்டும் ஒரு கற்கை நெறியாக இலவச ஆங்கில கற்கை நெறியை ஆரம்பித்துள்ளமை இந்த பிரதேசத்திற்கு ஒரு வரப்பிரசாதமே.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டத்தில் இவ்வாறான தரமான இலவச பயிற்சி நெறிகள் நடத்தப்படுவது பாராட்டத்தக்க விடயம். இதற்கான லிட்டில் எய்ட் அமைப்பைச் சேர்ந்த கொன்ஸன் ரைன், ஜெயபாலன் மற்றும் Think 2wice அமைப்பினருக்கும் இந்த இடத்தில் எமது நன்றிகளை தெரிவித்துள்ள வேண்டும். அத்தோடு மாணவர்கள் இதனை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இங்கு உரையாற்றி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இலவசமாக சிறந்த  கணிணி கற்கைநெறியை வழங்கி வந்த லிட்டில் எய்ட் அமைப்பு தற்போதுThink 2wice  அனுசரணையில் சிறப்பான இலவச ஆங்கில கற்கை நெறியையும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வில்  கிளிநொச்சி கல்வி வலயத்தின் ஆரம்ப பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் கணேசலிங்கம்,  தமிழ் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி மதுரைநாயகம், மற்றும் கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தின் உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்
Facebook Comments