திடீர் என பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த மாயமான கிளிநொச்சி வர்த்தகர்

கொம்மந்தரை வல்வெட்டித்துறைச் சேர்ந்த கிளிநொச்சியின் பிரபல வர்த்தகருமான  கிருஸ்ணசாமி ரதீசன் (வயது36) என்பவரை 12.10.2016 ஆந் திகதி மதியம் 12.00 மணியிலிருந்து இவரைக் காணவில்லை என்று உறவினர்களால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டமைக்கு அமைவாக கிளிநொச்சிப் பொலிசார்  விசாரணைகளை மேற்கொண்டு இருந்த நிலையில் இவர் கடத்தப்பட்டிருப்பார் என ஒருசிலரும்  இல்லை இவர் கடன்தொல்லையினால் தலைமறைவாகி இருப்பார் என ஒரு சிலரும் பொலிசாருக்கு வழங்கிய தகவல்களுக்கு அமைவாக விசாரைனைகள்
தீவிரப்படுத்தப்பட்டிருந்தது
hm3 hm4 hm5 hm6 hm7 hm1 hm2
இந்நிலையில்  இன்று முற்பகல்  குறித்த வர்த்தகர் தானாகவே  கிளிநொச்சிப் பொலிஸ்நிலையத்திற்கு சென்றுள்ளார்  இதனால் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்ட அவரது உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அவரது பணியாளர்கள்  சந்தோசக்களிப்பில் ஆரவாரத்தில் ஈடுபட்டிருந்தனர்
பின்பு குறித்த வர்த்தகரை கிளிநொச்சிப் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு பதில்பொறுப்பதிகாரி அனந்த சுமணசிறி விசாரணைக்கு உட்ப்படுத்தியத்தில் தான் தனது வேலைப்பளு காரணமாக சரியாக நித்திரைகளின்றி மன உளைச்சல்  காரணமாக  தான் செய்வதறியாது  பேரூந்தில் ஏறி வவுனியா மட்டக்களப்பு திருகோணமலை போன்ற இடங்களிற்கு பேருந்திலையே பயணம் செய்ததாகவும் தனது மனநிலை சரியானதும் தான் இன்று கிளிநொச்சிக்கு திரும்பி உள்ளதாகவும் தன்னை யாரும் கடத்தவில்லை எனவும் நான் கடன் காரணமாக தலைமறைவாகவில்லை எனவும் தனது வாக்குமூலத்தில் பதிவிட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
அத்துடன் இவர்  கடன்காரனமாக தலைமறைவாகி இருந்திருப்பாரா என  எமது செய்திப்பிரிவு  கிளிநொச்சி பொலிஸ்  நிலையத்தில் வினவிய போது  அவர் தங்களுக்கு பணம் தர  வேண்டும் என இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் வரவில்லை எனவும்  அவர் வர்த்தகங்கள் செய்வதனால் சுழற்சி முறையிலான சில கடன்கள் இருப்பதாக அறிய முடிகின்றது என  கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன
Facebook Comments