கிளிநொச்சி பரந்தன் ஆகிய பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கம் கிளிநொச்சி மாவட்ட சிவில் அமையம் ஆகிய இணைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளன.
எதிர்வரும் 20ம் திகதி 9.00 மணிக்கு கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தி கிளிநொச்சி நகரம் பரந்தன் சந்தி இரணைமடுச்சந்தி ஆகிய இடங்களில் சம நேரத்தில் குறித்த கையெழுத்துப் போராட்டத்தினை நடத்தவுள்ளனர்.
Facebook Comments