பிரதிப் பொலிஸ்மாஅதிபரின் விசேட குழுவினரால்  கசிப்பு      உற்பத்திநிலையம்  முற்றுகைimage-0-02-06-0dd9d68b2305736b627eed9db2bce76b251bf7041a14e6fe33cebdf7f350ecd5-v image-0-02-06-ebb19b3dee4c5b250a654b76e93f79803c7d309a0e9e5b11793a8afb1ae58001-v
 

 

 

 

 

புளியம்பொக்கணை  பெரியகுளம்   பகுதியில் இயங்கிவந்த  கசிப்பு உற்பத்திநிலையம் ஒன்று கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மாஅதிபர் மகேஷ் வெலிகன்ன அவர்களின் விசேட குழுவினரால்   முற்றுகை இடப்பட்டுள்ளது 


நேற்று மாலை  கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மாஅதிபர் மகேஷ் வெலிகன்ன அவர்களின் விசேட குழுவினருக்குக்  கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து    குழுவினர் குறித்த பகுதிக்கு சென்று முற்றுகை இட்டதனை அடுத்து31 போத்தல் கசிப்பு ,ஒரு  பேரல்களில் இருந்த 240 போத்தல் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி செய்வதற்கான உபகரணங்கள் என்பன  பொலிசாரால் புளியம்பொக்கணை  ,சுண்டிக்குளம் களப்புப் பகுதியில்  மீட்கப்பட்டுள்ளதுடன் இரு சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளனர்
 
   மீட்கப்பட்ட  பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் இன்று   கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Facebook Comments