முதலமைச்சரின் ஒன்பது  மில்லியன் ரூபாய் முடியும் தறுவாயில்
 
கடந்த மாதம்  பதினாறாம் திகதி தீ விபத்தினால் எறிந்த கிளிநொச்சிப் பொதுச் சந்தையினை  பதினேழாம்  திகதி வந்து பார்வையிட்ட வட மாகாண  முதலமைச்சர் விக்னேஸ்வரன்   மிகவிரைவில் குறித்த சந்தையினை மீண்டும் இயங்க வைப்பதற்கு  தற்காலிகக்  கடைகளை அமைப்பதற்கு ஆவனை செய்வதாகக் கூறிச் சென்றிருந்தார்
 
   அதன்பிரகாரமும்  கரைச்சிப் பிரதேச சபையினரால்  வழங்கப்பட்டுள்ள  மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலும் 
தீவிபத்தினால்  முழுமையாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிப்  பொதுச்  சந்தை வர்த்தகர்களுக்கு தற்காலிகக்  கடைகளை அமைப்பதற்கு  கடந்த மாதம் இருபத்து மூன்றாம் திகதி   ஒன்பது மில்லியன் ரூபாய்யினை ஒதுக்கியியிந்தார் 
hhaa2 hhaa4 hhaa5 hhaa1
 
அதனடிப்படியில்  பாதிக்கப்பட்ட  வர்த்தகர்களுக்கு தற்காலிக    கடைகளை அமைப்பதற்கான  பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு  குறித்த வேலையினை வெகு விரைவில் முடிப்பதற்கு நான்கு ஒப்பந்ததாரரிடம் பணிகள் வழங்கப்பட்டிருந்தது
 
அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நற்ப்பத்தைந்து  தற்காலிகக் கடைகள் அமைக்கும் பணிகள் இன்றையதினம் தொன்னூறு வீதமான வேலைகள் முடிவடைந்திருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார் 
Facebook Comments