கிளிநொச்சிக்  காட்டுப்பகுதியில் மண்ணகழ்ந்த ஆறுபேர் கைது 

 
கிளிநொச்சி வன்னேரிக்குளம் காட்டுப்பகுதியில் மண் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் இருந்தும் காட்டுப்பகுதியில் மண் ஏற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆறுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் 
 
 
நேற்று இரவு   கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மாஅதிபர் மகேஷ் வெலிகன்ன அவர்களின் விசேட குழுவினருக்குக்  கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து    குழுவினர் குறித்த பகுதிக்கு சென்று முற்றுகை இட்டதனை அடுத்து  மண் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் இருந்தும் காட்டுப்பகுதியில்  மண் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர் இரக வாகனங்கள் மற்றும் ஒரு ஜேசிபி இரக வாகனத்துடன் சாரதிகள் உட்பட ஆறுபேரினை கைதுசெய்துள்ளனர் 
 
மீட்க்கப்பட்ட வாகனங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆறுபேரினையும் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்த உள்ளதாக பிரதிப் பொலிஸ்மாஅதிபரின் விசேட குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன 
Facebook Comments