விசேட தேவை உடையோர் மற்றும் விசேட வகைக்குட்பட்ட பெண்களை ,இனங்காணும் ஆரம்பகட்ட ஆய்வு தொடர்பான தகவல் திரட்டுக்களின் பகிர்வு
வடமாகாண சுகாதார அமைச்சால் கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட தேவை உடையோர் மற்றும் விசேட வகைக்குட்பட்ட பெண்களை ,இனங்காணும் ஆரம்பகட்ட ஆய்வு தொடர்பான தகவல் திரட்டுக்களின் பகிர்வு ,இன்று 20ஆம் திகதி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் நடைபெற்றது.
அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் தலைமையில் நடைபெற்ற  நிகழ்வில், ஆய்வு முறை அறிமுகத்தை யாழ். பல்கலைக்கழக சமுதாய மருத்துவத் துறை தலைவர் வைத்திய கலாநிதி ,.சுரேந்திரகுமாரன் நிகழ்த்தினார் .
,அத்துடன்  பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், சிறப்பு அதிதிகளாக வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவ கலாநிதி ப.சத்தியலிங்கம் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா  ஆகியோர் கலந்துகொண்டனர்.
வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலேயே இ,ந்த திட்டம் முதலாவதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
.
ஏற்கனவே  ஆசிய அபிவிருத்தி வங்கி  நிதியுதவி வழங்கி, விசேட தேவையுடையோர் தொடர்பான தகவல்கள் ஆய்வுசெய்யப்பட்டது. இந்த ஆய்வில் திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் அனுபவங்களை பகிர்வு செய்யும் நிகழ்வே இன்று நடைபெற்றுள்ளது
Facebook Comments