குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யபப்ட்ட யாழ்ப்பாண காவல்  நிலையத்தை சேர்ந்த 5 காவல்முதுறையினரையும் , எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதிஸ்தரன்  உத்தரவு இட்டுள்ளார்.

யாழ்.கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் நேற்று முன்தினம்  வியாழக்கிழமை நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் சென்ற பல்கலைகழக மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட வேளை பல்கலைகழக மாணவர்களான நடராஜா கஜன் (வயது 23) மற்றும் பவுண்ராஜ் சுலக்‌ஷன் (வயது 24) ஆகியோர் உயிரிழந்து உள்ளனர்.
அந்த சம்பவம் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண  காவல்  நிலையத்தை சேர்ந்த உப  காவல் பரிசோதகர் சரத்திஸ்ஸ என்பவர் தலைமையிலான , ஜெயவர்த்தன, சந்தன, லங்காமன், நவரத்தின ஆகிய பொலிசார் உடனடியாக அமுலுக்கு வரும் வரையில் பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யபட்டனர்.
கைது செய்யப்பட்ட  காவல்துறையினா் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.  அதனை தொடர்ந்து குறித்த ஐந்து  காவல்துறை  சந்தேகநபர்களையும் எதிர்வரும் 4 ம் திகதி வரையில் அனுராதபுர சிறைச்சாலை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.
Facebook Comments