கிளிநொச்சி கலைஞர்களின்  நடிப்பில் உருவான குற்றம்  வெளியீடு
  

ஈழத்து சினிமாவினை  வளர்க்கும் நோக்கோடு தமது படைப்புக்களை  வழங்கி வரும்  கிளிநொச்சி எல் பி எம்  குறும்படக் குழு   மக்களிற்கு விழிப்புணர்வுகளையும் , சிறந்த பல கருத்துக்களையும்   தமது குறும்படங்கள் மூலம்  வழங்கி வருகின்றனர் 

 
குறித்த   கிளிநொச்சிக் கலைஞர்களின்  முதலாவது குறும்படமான திருடர் கூட்டம் என்னும் குறும்படத்தினை வழங்கி ஈழத்து இரசிகர்களை  தம்வசம் ஈர்த்துக்கொண்ட இவர்கள்   வவுனியாவின் பிரபல  ஈழத்து நடிகை மிதுனா   கிளிநொச்சியின்  பிரபல  ஈழத்து நடிகனுமான குகனி  ஆகியோர் கதாநாயகர்களாகவும்   கிளிநொச்சியின்  வளர்ந்து வரும்   நடிகர்களான   துவாரகன், சித்தாரா, முரளி, ஹரிஸ், மிதுலன், சசிகரன்.யோ, சிந்து, லூயிஸ். பௌசிகன்ஆகியோரின் நடிப்பில்  இளம் இயக்குனராக மக்களின்  மனதினைக் கவர்ந்த கதிர் இயக்கத்தில்  உருவான   சமுக சிந்தனையுள்ள ஒரு  சிறப்புப்படைப்பான   குற்றம்  குறும்படத்தினை  வெளியிட்டுள்ளனர்
கிளிநொச்சிக் கலைஞர்களுக்கு  ஆதரவினை  வழங்கும் எமது  கிளிநொச்சி மண்ணின்  பதிவு செய்யப்பட்ட  நடுநிலை  ஊடகமான  கிளிநொச்சி மீடியா  குற்றம்  குறும்பட  வெளியீட்டிற்கு வரமுடியாமைக்கு  வருந்துகின்றோம்  அத்துடன் இனிவரும்  எல் பி எம்  குறும்படக் குழுவின் படைப்புக்களுக்கு எமது  ஊடகசேவை உங்களுடன் கைகொடுத்தொடரும் என்பதனை அறியத்தருகின்றோம்
https://youtu.be/lW0502bwS-c
அத்துடன் வெளிவந்த குற்றம் குறும்படத்தில் கருத்துக்கள், நடிப்பு, இயக்கம் ,,ஒளிப்பதிவு, படப்பிடிப்பு என்பன அருமையாக உள்ளது  கிளிநொச்சி மீடியா சார்பான வாழத்துக்கள்  மேலும்  வளர வாழ்த்தி நிற்கின்றோம் 
https://youtu.be/lW0502bwS-c
நன்றி
Facebook Comments