யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும் அவர்களுக்கு நீதி கோரியும்  இன்று  திங்கட்கிழமை கிளிநொச்சியில்   பேரணி இடம்பெற்றது .

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து  ஏற்பாடு செய்த இப் பேரணி

dsc00274 dsc00277 dsc00279 dsc00280 dsc00289 dsc00291 dsc00303 dsc00307 dsc00308 dsc00272

கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்து பொலிஸ் அறாஜகம் ஒழிக , வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும்   பேரணி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்து மேலதிக அரசாங்க அதிபரிடம் கண்டன மனு கையளிக்கப்பட்டது

இந்த பேரணியில், பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், சிவில் பொது அமைப்புக்கள், வர்த்தகர்கள், கல்விச்சமூத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் , வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிளை ஆகியோர் கலந்து கொண்டனர்

Facebook Comments