india-vs-new-zealand-series-2016இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் தொடங்கியுள்ளது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற முன்னிலையில் இருக்கிறது.

இந்நிலையில் இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கி உள்ளது.

அதே சமயம் இந்திய அணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டைப் போட பல வியூகங்களுடன் இறங்கி விளையாடி வருகிறது நியூசிலாந்து.

Facebook Comments