இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியின் தலைவராக சுழல் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

எஞ்சலோ மெத்தியுஸின் பாதத்தில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் இரண்டு வாரங்களுக்கு விளையாட கூடாது என வைத்திய ஆலோசனை வழங்கப்பட்டுள்ள நிலையில் ஹேரத் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமிந்தவாஸ் மற்றும் முரளிக்கு பின்னர் ஹேரத் டெஸ்ட் போட்டியில் தலைமை வகிக்கும் பந்துவீச்சாளராவார்.

ஹேரத் 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 ஐந்து விக்கட்டுகள், 6 பத்து விக்கட்டுகள் என 332 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

அணியின் மூத்த வீரரான ரங்கன ஹேரத் மெத்தியுஸ் மற்றும் தினேஸ் சந்திமால் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் அணியை வழிநடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments