ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இந்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைகழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் நாளை பல்கலைக்கழகத்திற்கு வருகை தரவுள்ளதாகவும் துணை வேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களை சேர்ந்த மாணவர்கள் அனைவரும் தொடர்ந்தும் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீள்குடியேற்ற அமைச்சருடன் நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் சுமூகமாக கூடும் என தாம் நம்புவதாகவும் யாழ். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததை அடுத்து மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Facebook Comments