பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் கோரியுள்ள   5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்று தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளாத காரணத்தினால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பற்ற ரயில் கடவை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாதுகாப்பற்ற ரயில் கடவைகளுக்கு அண்மையில் வசிப்போர் மற்றும் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளை கடந்து செல்கின்ற சாரதிகள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Facebook Comments