சுவிஸில் தந்தை ஒருவர் தனது மகளை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினில் Andalusia பகுதியில் வைத்து குற்றவாளி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு Calvin நகர தெருவில் வழிப்போக்கர் ஒருவருக்கு மெமரி கார்டு கிடைத்துள்ளது.

அதில், தந்தை தனது மகளை துஷ்பிரயோகம் செய்யும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்துள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வழிப்போக்கர் மெமரி கார்டை பொலிசில் ஒப்படைத்துள்ளார்.

குறித்த கோப்புகளை வைத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், பல ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பெயின் நகரில் வைத்து குற்றவாளியை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

தற்போது, மாட்ரிட் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி விரைவில் சுவிஸ் கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments