பிரபல நடிகையும் கமல்ஹாசனின் துணைவியுமான கவுதமி புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தது மட்டுமின்றி புற்று நோய் விழிப்புணர்வுக்காக பல அரிய சேவைகள் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று நடிகை கவுதமி பாரத பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து கவுதமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது,

‘பிரதமரை இன்று சந்தித்த அனுபவம் த்ரில்லாக இருந்தது. மேலும் எங்களை போன்ற நட்சத்திரங்கள் பிரதமரை சந்திப்பது எளிதாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து பிரதமரிடம் கவுதமி பேசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Facebook Comments