இன்று காலை 4.30 மணியளவில்; பொலிசாரின் தேடுதலில் 14 கிலோ கேரளா கஞ்சாவினை வவுனியா பொலிசார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.

p1220468இன்று (29.10.2016) காலை வீதி ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டு பொலிசார் சென்றபோது வவுனியா பொதுவைத்தியசாலைக்கு அருகில் அதிகாலை 4.30 மணியளவில் சந்தேகத்திற்கிடமான சொகுசுக் காரினை சோதனை மேற்கொண்டபோது குறித்த காரில் மறைத்து வைக்கப்பட்டு யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலிருந்து தெஹிவளை, வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட 14கிலோ கேரளா கஞ்சாவினை பொலிசார் மீட்டுள்ளதாகவும் இதன் பெறுமதி 17 இலட்சம் பெறுமதிவாய்ந்தது எனவும் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டதகவும். குறித்த சந்தேக நபர் இருவரையும் இன்று நீதிமன்றதில் முற்படுத்த உள்ளதாகவும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி தெரிவித்தார்.

Facebook Comments