மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப்பெண்களாக செல்லும் பெண்களின்  நிலைமை கவலைக்கிடம் 

இலங்கையிலிருந்து அதிகளவான பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப்பெண்களாக சென்று பணியாற்றி வருகின்றனர் இதில்  மலையகம் உள்ளிட்ட வடக்கு கிழக்கு மற்றும்  தென்னிலங்கையில் இருகின்ற  கிராமங்களைச் சேர்ந்தவர்கள்  மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்று பணியாற்றி வருகின்ற நிலையில்    அங்கு அவர்கள் பல சித்திரவதைகளை அனுபவிப்பதாகவும்   ரியாத் நகரில் உள்ள இலங்கை தூதரகத்தின் சில அதிகாரிகள் உங்களை  இலங்கைக்கு திருப்பி அனுப்புவதாக தெரிவித்து ஒவ்வொருவரிடமும் பணம் பெற்றுக்கொண்டுள்ள போதிலும் தமக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்கவில்லை எனவும்  அங்கு  ஒரு  குறிப்பிட்ட இடத்தில் பதினைந்திற்கும் மேற்ப்பட்ட பெண்கள்  தடுத்துவைக்கப்பட்டு  சித்திர வதைக்கு உள்ளாக்கப்படுவதாக அங்கிருக்கும்  அவர்களது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்  அத்துடன்  இவ்வாறு பல நாடுகளிலும் இருந்து  அங்குவந்து பணிப்பெண்களாக  வேலைசெய்பவர்களுக்கும்  இவ்வாறானா  துயரச்சம்பவங்கள் நடைபெற்றிருந்த போதும்  அவ்  நாடுகளுடைய தூதரகங்கள் தலையிட்டு தீர்வினை எட்டியுள்ளது ஆனால்  இலங்கையில் இருந்து பணிப்பெண்களாக  சென்ற பெண்களை  அங்கு தடுத்து வைத்து உண்ணுவதற்கு உணவு கூட வழங்காமல் சித்திரவதைகள் செய்து வருவதாகவும் ஆனால் இலங்கைத்தூதரகம் இதில் தலையிடாது பின்னர்  அங்கிருந்து வருகின்ற பிணங்களைப் பொறுப்பெடுக்கவா இருக்கின்றார்கள் எனவும்  கேள்வி எழுப்புகின்றனர்

அத்துடன் குறித்த பகுதியில் சித்திரவதைகளை அனுபவித்துக்கொண்டுள்ள பல பெண்களின் காணொளிகள்  சமூக இணையத்தளங்கள் மூலமாக  வெளியாகி இருக்கின்ற  நிலையில் எமது செய்திப்பிரிவு அவர்களுடன் தொடர்பினை  ஏற்ப்படுத்த முனைந்தது  எனினும்  அவர்களுடன் தொடர்பினை ஏற்ப்படுத்த முடியவில்லை எனினும்  அவர்களது நண்பர்களுக்கு ஒருவரது தொடர்பு கிடைத்திருப்பதாகவும்  ஆனால்  அவருடன் பேசுவதால் தனக்கு பாதுகாப்பு  பிரச்சனை இருப்பதாக  குறித்த பெண் தெரிவிப்பதாகவும் அவருடன் எவ்வாறாயினும் தொடர்பினை ஏற்ப்படுத்தி நிலைமைகளை வெளியில் கொண்டுவர முயற்சிப்பதாக அவர்களது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்  அத்துடன்  இலங்கயில் உள்ள அனைத்து ஊடகங்களும்  தமது நிலைமைகளை வெளியில் கொண்டுவர  உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்

Facebook Comments