ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறைந்த கலாநிதி பண்டித் அமரதேவவின் மரணச்சடங்கில் கலந்து, பூதவுடல் தாங்கிய பேழையை சுமந்து அஞ்சலி செலுத்திய சம்பவம்  உலக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர் மற்றும் இலங்கையில் சிங்கள இசையுலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்பட்ட இசையமைப்பாளரும் பிரபல பாடகருமான மறைந்த கலாநிதி பண்டித் அமரதேவவின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று  காலை 10 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதன்போது அவரது உடல் அடங்கிய பேழையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாங்கி வந்ததமை குறிப்பிடத்தக்கது. நாட்டின் ஜனாதிபதி ஒருவரால் கலைஞர் ஒருவரின் உடல் இவ்வாறு தாங்கி வரப்பட்டமை வரலாற்றில் இதுவே முதன் முறையாகும்.

இதேவேளை, அன்னாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும், அனைத்து வீடுகளிலும் வெள்ளைக் கொடியை தொங்க விடுமாறும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

காலஞ்சென்ற பிரபல மூத்த சிங்களமொழிப் பாடகர் டபிள்யூ.டி. அமரதேவவின் இறுதிக் கிரியைகள் நாளை சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பூரண அரச மரியாதையுடன் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரலாற்றில் மரணித்தவர் ஒருவரின் உடலை சுமந்த முதலாவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன  தன் பெயரை வரலாற்றில் இன்று பதிவு செய்தார்.

 

Facebook Comments