மீனவர் பிரச்சினை குறித்துப் பேச்சு நடத்த இந்தியா செல்லும்  அமைச்சர்கள் மட்டக்குழுவில் முதல் முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இடம்பெறவுள்ளதாக,  வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று புதுடெல்லி செல்லும்  அமைச்சர்கள் மட்டக்குழுவில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திர னும்   இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தரப்புக் குழுவின் ஒரு உறுப்பினராக இவர், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடனான பேச்சுக்களில் பங்கேற்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
இழுவைப்படகு மீன்பிடி முறையைத் தடை செய்யும் தனிநபர் பிரேரணை ஒன்றை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,  நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments